நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் எனக் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம், “நான் எப்போது சாவேன் என ஏன் கேட்கிறீர்கள்” என பதில் கேள்வி கேட்டு அவரின் வாயை அடைத்தார் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி.
வழக்கறிஞர் எம்எம் காஷ்யப் மீது மோசடி வழக்கு தொடரப் பட்டது. இதனால் அவருக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒதுக்கப்பட்டிருந்த வழக்கறிஞருக்கான அறையி லிருந்து காலி செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், வழக்கில் தீர்ப்பு வரும் வரை அறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டால் காலி செய்ய வேண்டும் எனவும் தெரி விக்கப்பட்டது. ஆனால், புகார்தார ருக்கு பணம் கொடுத்து, காஷ்யப் சமரசம் செய்து கொண்டார். இது, வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டதற்கு இணையானது.
எனினும் பணம் கொடுத்து சமரசம் செய்து கொண்டதால், அப் போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா 2014-ம் ஆண்டு காஷ்யப் அறையைக் காலி செய்ய உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக காஷ்யப் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார். காஷ்யப் தரப்பில் 93 வயதாகும் ராம் ஜெத்மலானி ஆஜரானார். வயது மூப்பினால் வரும் பிரச்சினைகள் ஏதுமின்றி, 93 வயதிலும் சட்ட நிபுணராக வலுவாக செயல்பட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் ராம் ஜெத்மலானி.
இந்த வழக்கு விசாரணையின் போது, ராம் ஜெத்மலானியைப் பார்த்து ஆச்சரியத்துடன் “நீங்கள் எப்போது ஓய்வுபெறுவீர்கள்” என நீதிபதி கேட்டார். அதற்கு ஜெத்மலானி, “கனம் நீதிபதி அவர்களே நான் எப்போது சாவேன் என ஏன் கேட்கிறீர்கள்” என்றார்.
இறக்கும்வரை வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்வேன் என் பதையே வெளிப்படுத்தவே ஜெத் மலானி அவ்வாறு பதிலளித்தார்.