திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிந்தராஜர் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
திருப்பதி நகரின் மையப்பகுதி யில் கோவிந்தராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான பராமரிப்பில் உள்ள இக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் கோலா கலமாக தொடங்கியது. முன்னதாக உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா நடந்தது. பின்னர் காலை 10 மணியளவில் தங்க கொடி மரத்தில் கருட சின்ன பிரம்மோற்சவ கொடியை, வேத மந்திரங்கள் முழங்க பண்டிதர்கள் ஏற்றி வைத்த னர். இதைத் தொடர்ந்து இரவு பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேதராக கோவிந்தராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.
முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 4-ம் தேதியும், திருத்தேர் பவனி 7-ம் தேதியும் நடக்கிறது. 8-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவுக்கு வருகிறது.