தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக உ.பி.யில் 3 வேட்பாளர்களுக்கு எதிராகவும் மணிப்பூரில் ஒரு வேட்பாளருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அட்டீக் அகமது சைஃபி (மொராதாபாத்), சமாஜ்வாதி வேட்பாளர் அதுல் கர்க் (ஆக்ரா வடக்கு), அமைதி கட்சி வேட்பாளர் ராகேஷ் வால்மீகி (ஆக்ரா கன்டோன் மென்ட்) ஆகியோர் தேர்தல் முறை கேடுகளில் ஈடுபடுவதை சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது.
இதுபோல் மணிப்பூரில் மாவோ தொகுதி வேட்பாளர் ஓபா ஜோரம் மீதும் தேர்தல் முறைகேடு குற்றச் சாட்டு எழுந்தது. இந்த வேட்பாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் அதிகாரி களுக்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. மேலும் வாக் காளர்களுக்கு லஞ்சம் கொடுப் பதற்கு எதிரான இந்திய தண் டனைச் சட்டப் பிரிவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.