டெல்லி சட்டமன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இப்பதவிக்கு ஆம் ஆத்மி, பாஜக இடையே போட்டி இருந்த நிலையில், ஆம் ஆத்மி உறுப்பினர் எம்.எஸ்.தீர் வெற்றி பெற்றார்.
அவருக்கு 37 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக உறுப்பினருக்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பாஜக சார்பில் இப்பதவிக்கு முன்னாள் அமைச்சரும், அவையின் மூத்த உறுப்பினரு மான ஜெக்தீஷ் முகி மனு செய்திருந்தார். இவரை தற்காலிக அவைத் தலைவராக, டெல்லி துணைநிலை ஆளுநர் நியமித்தபோது அதை ஏற்க மறுத்து விட்டார்.
இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர் மத்தீன் அகமது இடைக்கால அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.