இந்தியா

மாயாவதியை தரக்குறைவாக பேசிய தயாசங்கர் சிங் தலைமறைவு- பகுஜன் மீது புகார் அளிக்க தயாராகும் குடும்பத்தினர்

பிடிஐ

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்ததால் பதவி இழந்த பாஜக-வின் தயாசங்கர் சிங் தலைமறைவானதையடுத்து, மாயாவதி மற்றும் பகுஜன் மீது புகார் அளிக்க தயாசங்கர் குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.

போலீஸ் உயரதிகரி மனோஜ் குமார் ஜா, பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டும் தயா சங்கரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். தயாசங்கர் லக்னோ நீதிமன்றத்தில் சரணடைந்திருக்க வாய்ப்பிருப்பதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயாசங்கர் சிங்கின் சகோதரர் தர்மேந்திராவை அழைத்து போலீஸ் விசாரணை செய்தும் ஒரு தகவலும் பெயரவில்லை. “சிங் ஜூலை 21-ம் தேதி கோரக்பூர் சென்றார் அதன் பிறகு எந்த வித தொடர்பும் இல்லை என்றே கூறுகிறார்” என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தயாசங்கரின் மாமா வீட்டில் கடந்த இரவு போலீஸ் ரெய்டு மேற்கொண்டது, ஆனால் அங்கிருந்தும் ஒன்றும் பெயரவில்லை என்கிறார் போலீஸ் அதிகாரி ஜா.

தயாவின் மொபைல் போன் ஜூலை 20-ம் தேதி இரவு முதல் செயலில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே கணவனை காணாது தவிக்கும் தயாவின் மனைவி சுவாதி, மாயாவதி மற்றும் பகுஜன் மீது புகார் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். “என் கணவர் அரசியலில் இருக்கிறார், எங்களுக்கு எந்த வித அரசியல் தொடர்பும் இல்லை. நேற்று பகுஜன் கட்சியினர் பேசிய வார்த்தைகள் படுமோசமானவை. குடும்பத்தினர் பெயர்கள் அவமரியாதையாக இதில் இழுக்கப்படுகிறது.

மாயாவதி ஏன் நசிமுதீன் சித்திகி மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது 80 வயது முதிய மாமியாரின் நிலை என்ன என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது” என்று குமுறியுள்ளார் தயாசங்கர் மனைவி சுவாதி.

SCROLL FOR NEXT