இந்தியா

டெல்லி முதல்வர் வேட்பாளராக ஹர்ஷவர்தன் - பாஜக அறிவிப்பு

செய்திப்பிரிவு

வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நடக்கவிருக்கும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் டெல்லி முதல்வர் வேட்பாளராக ஹர்ஷவர்தனை பாஜக அறிவித்துள்ளது. இதனை இன்று புது டெல்லியில் நடந்த பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். முன்னர், தன்னை பாஜகவின் டெல்லி முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று கட்சியின் மாநகர தலைவர் விஜய் கோயல் வலியுறுத்தி வந்தார்.

இது குறித்து, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜ்நாத் சிங், "இந்த முடிவு ஏக மனதாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விஜய் கோயல் முழு சம்மதம் தெரிவித்துள்ளார்" என்று கூறினார்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தன், 15 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

SCROLL FOR NEXT