இந்தியா

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

பிடிஐ

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையின்போது 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து சுக்மா காவல்துறை கண்காணிப்பாளர் இந்திரா கல்யாண் கூறும்போது, ''சுக்மா மாவட்டத்தின் ஃபுல்பக்டி பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ரிசர்வ் போலீஸ் படையும், சத்தீஸ்கர் ஆயுதப் படையும், உள்ளூர் காவல்துறையும் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

என் கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 மாவோயிஸ்டுகளின் சடலங்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். அவர்களின் அருகில் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கிகளும் கிடைத்தன'' என்றார்.

முன்னதாக திங்கள்கிழமை பஸ்தார் பகுதியில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சண்டையில், தளபதியாக இருந்த 3 நக்ஸல்கள் கொல்லப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட என்கவுன்ட்டரோடு சேர்த்து இந்த ஆண்டு இதுவரை கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT