பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு, அந்நாட்டை இப்படித்தான் அடையாளப்படுத்தி, இவ்வகையில்தான் தனிமைப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஷ்மீர் தாக்குதல் குறித்து அவர் கூறும்போது, “இன்று யுரியில் தாக்குதல் நடத்தியவர்கள் நல்ல பயிற்சி பெற்றவர்கள், நிறைய ஆயுதங்களைத் தாங்கி வந்தவர்கள், தாக்குதலுக்கென்றே சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் என்பதற்கான சான்றுகள் தெரிந்துள்ளன” என்று கூறினார்.
இன்று ரஷ்யாவுக்கும் பிறகு அமெரிக்காவுக்கும் செல்லவிருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து தனது பயணத்தை ரத்து செய்தார்.