இந்தியா

ரயில் கட்டணம் 2 சதவிகதம் உயர்த்த முடிவு

செய்திப்பிரிவு

பயணிகள் கட்டணத்தையும் சரக்கு கட்டணத்தையும் 2 சதவீதம் உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக ரயில் கட்டணத்தை உயர்த்த பரிசீலித்து வருவதாக அத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்நிலையில், பயணிகள் கட்டணத்தையும் சரக்கு கட்டணத்தையும் 2 சதவீதம் உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. எனினும், புறநகர் ரயில்களில் கட்டணம் உயர்த்தப்படாது என்று ரயில்வே அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT