இந்தியா

திருப்பதி தேவஸ்தான புதிய நிர்வாகி பதவியேற்பு

என்.மகேஷ் குமார்

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில் குமார் சிங்கால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருமலை திருப்பதி தேவஸ் தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் பதவிக்காலம் முடி வடைந்ததால், வட இந்தியாவைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில்குமார் சிங்கால் அப்பதவிக்கு பணியமர்த்தப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பொறுப் பேற்பதற்காக நேற்று திருப்பதி வந்த அனில்குமார் சிங்கால், அலிபிரியில் இருந்து நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றார். பின்னர் ஏழுமலை யானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தி, தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அவரை முன்னாள் தேவஸ்தான அதிகாரி சாம்பசிவ ராவ், இணை நிர்வாக அதிகாரி போலா பாஸ்கர் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்று, ஏழுமலையான் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அனில்குமார் சிங்கால், ‘‘கடந்த 2 ஆண்டுகளாக ரூ.300 டிக்கெட்டில் ஏழுமலையானை தரிசித்து வருகிறேன். இதனால் பக்தர்களின் சிரமங்களை நன்கு அறிவேன். எனது பதவி காலத்தில் பக்தர்கள் சிரமம் இல்லாமல் ஏழுமலையானை தரிசிக்க நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT