உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத் தில் அந்த பெண் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை ஜனவரி 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை தெரிவித் தது.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் தொடர்பான புகாரை விசார ணைக்கு ஏற்க மாட்டோம் என்று கடந்த டிசம்பர் 5-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பு தவறானது என்று சுட்டிக் காட்டிய அந்த பெண் வழக்கறிஞர், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீதான புகாரை விசாரிப்பதற்கென்று தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
கங்குலியை அடுத்து..
சமீபத்தில் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் புகாரை உச்ச நீதிமன்றம் விசாரித் தது. அதே போன்று இப்போது ஸ்வதந்தர் குமார் மீது தான் தெரிவிக்கும் புகாரையும் விசாரிக்க வேண்டும் என்று அந்த பெண் வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.
2012-ம் ஆண்டு மே மாதம், ஸ்வதந்தர் குமார் நீதிபதியாக பணியாற்றி கொண்டிருக்கும் போது, தான் பயிற்சி வழக்கறிஞ ராக இருந்ததாகவும், அப்போது அவர் தன்னை பாலியல் ரீதி யாக துன்புறுத்தியதாகவும் அந்த பெண் வழக்கறிஞர் தெரிவித் துள்ளார். விசாகா வழிகாட்டு நெறி முறைகளின்படி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
தனது புகார் மனுவில் அந்த பெண் வழக்கறிஞர் கூறியுள் ளதாவது: “பயிற்சி வழக்கறிஞராக இருந்தபோது ஒருமுறை ஸ்வதந்தர் குமாரை அவரின் அலுவலகத்தில் சந்தித்து விட்டு நான் வெளியே வந்த போது, என்னுடனேயே வந்த ஸ்வதந்தர் எனது பின்புறத்தில் கையை வைத்தார். மிகவும் அசௌ கரியமாக உணர்ந்தேன். எனினும், அதை பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டேன். ஆனால், அதற்கு பின் மற்றொரு நாள், அவர் எனக்கு அளித்த பணியில் சிறிய தவறு செய்துவிட்டேன். அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க அலுவலகத்துக்குச் சென்றேன். ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்த ஸ்வதந்தர் குமார், என்னை அருகில் வருமாறு அழைத்தார். அப்போது திடீரென வலது கையால் எனது முதுகை சுற்றி வளைத்து, எனது இடது தோளில் முத்தம் கொடுத்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நான், அவரிடமிருந்து உடனடியாக என்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று அந்த பெண் வழக்கறிஞர் விடுத்துள்ள கோரிக்கைக்கு கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங், வழக்கறிஞர்கள் காமினி ஜெய்ஸ்வால், ஹரிஸ் சால்வே, விருந்தா குரோவர் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஸ்வதந்தர் குமார் மறுப்பு
தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக இருக்கும் ஸ்வதந்தர் குமார், இது ஒரு பொய் புகார். இதன் பின்னணியில் சதிச்செயல் இருப்ப தாக கருதுகிறேன்” என்று கூறியுள் ளார். தேசிய பசுமைத் தீர்ப்பாய அலுவலகத்துக்கு திங்கள்கிழமை ஸ்வதந்தர் குமார் வரவில்லை. அவருக்கு உடல் நலமில்லாததால், விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
பெண் வழக்கறிஞரின் புகாரின் அடிப்படையில் பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் பொறுப்பிலிருந்து ஸ்வத ந்தர் குமார் விலக வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.