இந்தியா

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுக்கு 6 பாடங்கள் கட்டாயமாகிறது

பிடிஐ

அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்போதுள்ள 5 பாடங்களுக்குப் பதிலாக 6 பாடங்களில் தேர்வு எழுதும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி மொழிப்பாடங்கள் 2, சமூக அறிவியல், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்குத் தேர்வு வைக்கப்படுகிறது.

இது தவிர மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பாடம் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் முறையும் இருந்தது.

தற்போது 2017-18 கல்வியாண்டு முதல் இந்த விருப்பப் பாடம் என்பது தொழில்/திறன் வளர்ப்புக் கல்விப்பாடமாக கட்டாயப்பாடமாகிறது, அதாவது 6-வது பாடம் ஒன்று படிக்க வேண்டிய கட்டாயமாகியுள்ளது. தேசியத் திறமைகள் தகுதி சட்டகத்தின்படி இன்னொரு பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

6-வது பாடமாக மாணவர்கள் தேர்ந்தெடுக்க திறன் வளர்ப்புக் கல்வியில் 13 பாடப்பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை

டைனமிக்ஸ் ஆஃப் ரீடெய்லிங்

தகவல் தொழில்நுட்பம்

பாதுகாப்பு

ஆட்டோமொபைல் டெக்னாலஜி

இன்ட்ரொடக்‌ஷன் டு பினான்சியல் மார்க்கெட்

இன்ட்ரொடக்‌ஷன் டு டூரிசம்

அழகுக்கலை

அடிப்படை வேளாண்மை

உணவு உற்பத்தி

அலுவலக நடைமுறைகள்

பேங்கிங் மற்றும் இன்சூரன்ஸ்

மார்கெட்டிங் அண்ட் சேல்ஸ்

ஹெல்த் கேர் சர்விசஸ்.



இவற்றிற்கான மதிப்பெண்களும் 100.

சிபிஎஸ்இ சுற்றறிக்கை இது குறித்து கூறும்போது, “அறிவியல், சமூக அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் ஏதோ ஒன்றில் தோல்வி அடையும் மாணவர்கள் கூடுதல் 6-வது பாடத்தை அதற்குப் பதிலாக மாற்றம் செய்து கொள்ளலாம். ஆனாலும், தோல்வியடைந்த பாடத்தில் மீண்டும் தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்கள் அதற்கான கம்பார்ட்மெண்ட் பரீட்சையிலும் பங்கேற்கலாம்” என்கிறது.

மொத்த மார்க்குகள் 100-ல் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் 50, இன்டர்னல் அசஸ்மென்ட்/பிராக்டிகல் ஆகியவற்றிற்கு 50 மதிப்பெண்கள்.

போர்டு பரீட்சை மற்றும் பிராக்டிக்கலில் மாணவர்கள் தலா 33% மதிப்பெண்கள் எடுத்தால் அந்த பாடத்தில் பாஸ் என்று நிர்ணயிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT