இந்தியா

காஷ்மீர் செல்லும் அனைத்துக் கட்சி குழு அறிவிப்பு

பிடிஐ

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் காஷ்மீர் செல்லும் அனைத்துக் கட்சிக் குழுவில் அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ஜிதேந்திர சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், அங்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ராஜ்நாத் சிங் தலைமையில் 2 நாள் பயணமாக இக்குழு வரும் 4-ம் தேதி காஷ்மீர் செல்கிறது.

குழுவில் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் (லோக் ஜனசக்தி), காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அம்பிகா சோனி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), தாரிக் அன்வர் (தேசிய வாத காங்கிரஸ்), சவுகாட்டா ராய் (திரிணமூல் காங்கிரஸ்), சஞ்சய் ராவத், ஆனந்த்ராவ் அட்சுல் (சிவசேனா), தொட்ட நரசிம்மா (தெலுங்கு தேசம்), பிரேம் சிங் சந்துமஜ்ரா (சிரோமணி அகாலி தளம்), திலீப் திர்கே (பிஜு ஜனதா தளம்), அசாதுதீன் ஒவைசி (ஏஐஎம்ஐஎம்), பக்ருதீன் அஜ்மல் (ஏஐயுடிஎஃப்), இ.அகமது (முஸ்லிம் லீக்), ஜிதேந்திர ரெட்டி (டிஆர்எஸ்), என்.கே. பிரேம்சந்திரன் (ஆர்எஸ்பி), பி. வேணுகோபால் (அதிமுக), திருச்சி சிவா (திமுக), ஒய்.பி. சுப்பா (ஒய்எஸ் ஆர்-காங்.), ஜெய்பிரகாஷ் யாதவ் (ஆர்ஜேடி), தரம்வீர் காந்தி (ஆம் ஆத்மி), துஷ்யந்த் சவுதாலா (ஆர்எல்டி) ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற பிரதிநிதிகள் ஆவர்.

பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ் வாதி கட்சியினர் இக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள போதும், பிரதிநிதி களை அனுப்பவில்லை.

SCROLL FOR NEXT