இந்தியா

பஞ்சாப் தேர்தல் 17 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

செய்திப்பிரிவு

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. இதில் 17 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா இந்தப் பட்டியலை வெளியிட்டார். கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் ஒப்புதலை தொடர்ந்து இந்தப் பட்டியல் வெளியிடப்படுவதாக அவர் கூறினார்.

சுஜான்பூர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ தினேஷ் சிங் பப்புவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. போவா (தனி) தொகுதியில் சீமா குமாரி, பதான்கோட் - அஷ்வனி சர்மா, ஜலந்தர் வடக்கு - கே.டி.பண்டாரி, தசுயா - சுக்ஜீத் கவுர் சாஹி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவை தவிர தினாநகர் (தனி) அமிர்தசரஸ் மேற்கு, அமிர்தசரஸ் மத்திய தொகுதி, அமிர்தசரஸ் கிழக்கு, முகேரியன், ஹோஷியார்பூர், லூதியானா மத்திய தொகுதி, லூதியானா மேற்கு, லூதியானா வடக்கு, பெரோஸ்பூர், அபோஹர், ராஜ்புரா ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT