மகாத்மா காந்தியின் 144-வது பிறந்த நாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ராஜ்காட்டில் ஜனாதிபதி பிரணப், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலில் ராஜ்காட்டிற்கு வந்தார். அவருக்குப் பின்னர் பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானியும் அவரது மகள் பிரதீபாவும் வந்தனர். தலைவர்கள் மலரஞ்சலி செலுத்திய பின்னர் சர்வ சமய பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
இன்று முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 109வது பிறந்த தினமும் நினைவு கூறப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் டெல்லியில் இருக்கும் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடமான விஜய் காட்டில் மலரஞ்சலி செலுத்தினர்.