இந்தியா

வங்கதேச விடுதலைப் போரை விளக்கும் ஆவணப் படம்: இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து தயாரிக்கின்றன

பிடிஐ

கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போர் பற்றிய ஆவணப் படத்தை இந்தியாவும் வங்கதேச மும் இணைந்து கூட்டாக தயாரிக்க உள்ளன.

இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

வங்கதேச தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த நாள் 2020-ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அந்நாடு தயாரிக்கும் மெகா திரைப்படத் துக்கும் இந்தியா உதவ உள்ளது.

மேலும் வங்கதேச மக்களுக்கு என அகில இந்திய வானொலி சார்பில் தனி ஒலிபரப்பு ‘ஆகாஷ் வாணி மைத்ரீ ’ என்ற பெயரில் வங்க மொழியில் வரும் 23-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடுவை வங்கதேச தகவல் ஒலிபரப்பு அமைச்சர் ஹசனுல் ஹக் இனு டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியா சார்பில் இதற்கான உறுதி அளிக்கப்பட்டது.

வங்கதேச விடுதலைப் போர் பற்றிய ஆவணப் படம் தயாரிப்பில், பிலிம் டிவிஷன், தூர்தர்ஷன் மற்றும் மத்திய அரசின் இதர ஊடகப் பிரிவுகள் வசமுள்ள தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள வெங்கய்ய நாயுடு பரிந்துரை செய்துள்ளார்.

2021-ல் கொண்டாடப்பட உள்ள வங்கதேச 50-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த ஆவணப் படம் தயாரிக்கப்பட உள்ளது. இந்தியாவும் வங்கதேச மும் கூட்டாக ஆடியோ விஷுவல் தயாரிப்பதற்கான ஒப்பந்த வரைவுப் பணிகளை தொடங்கிட இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்திய திரைப்படை விழாவை வங்கதேசத்திலும் வங்கதேச திரைப்பட விழாவை இந்தியாவி லும் நடத்த இந்தப் பேச்சுவார்த் தையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

1935-ல் பிரமதேஷ் பரூவா இயக்கிய ‘தேவாஸ்’ வங்காளி திரைப்படத்தின் மூலப் பிரதியை தருமாறு வெங்கய்ய நாயுடு விடுத்த கோரிக்கையை வங்கதேச அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

இரு நாடுகளிடையே தடையற்ற திரைப்பட வர்த்தகம் நடை பெற வங்கதேசத்தில் இந்திய திரைப்படங்கள் மீதான கட்டுப் பாடுகளை தளர்த்த வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டார்.

இந்திய திரைப்படக் கல்லூரி களில் வங்கதேச இளம் இயக்குநர் கள் மற்றும் தொழில்முனைவோ ருக்கு பயிற்சி அளிக்க தயாராக இருப்பதாகவும் நாயுடு தெரி வித்தார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT