வடக்கு காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தற்கொலைப் படை தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் அதிகாரி உட்பட 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 75 வயது முதியவர் ஒருவரும் உயிரிழந்தார்.
ஸ்ரீநகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில், குப்வாரா மாவட்டம் பன்ஸ்காம் என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. குப்வாரா நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் இந்த முகாம் உள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த முகாமின் பின்பக்கமாக 3 தீவிரவாதிகள் ஊடுருவினர். இவர்கள் சரமாரியாக சுட்டுக்கொண்டு, சுமார் ஆயிரம் வீரர்கள் தங்கியுள்ள ‘ஆபிசர்ஸ் காம்ப்ளக்ஸ்’ நோக்கி முன்னேறினர். இதையடுத்து பதில் தாக்குதலை தொடங்கிய ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளை முகாமின் ஒரு வாயில் நோக்கி பின்வாங்கச் செய்தனர்.
அப்போது ஏற்பட்ட கடும் சண்டையில் கேப்டன் ஆயுஷ் யாதவ், சுபேதார் பூப் சிங் குஜ்ஜார், நாயக் பி.வெங்கடரமணா ஆகிய 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் காயம் அடைந்தனர்.
தீவிரவாதிகள் தப்பியோட முயன்ற போது, ராணுவத்தின் அதிரடிப் படையினர் களத்தில் இறங்கி இருவரை சுட்டுக்கொன்றனர். ஒரு தீவிரவாதி இருளில் தப்பியோடிவிட்டார். இந்த நடவடிக்கை 35 நிடமிடங்களில் முடிவுக்கு வந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
சம்பவ இடத்திலிருந்து 3 ஏகே ரக துப்பாக்கிகள், 9 தோட்டா உறைகள், ஒரு சீன கைத்துப்பாக்கி, 3 கையெறி குண்டுகள், 2 ரேடியோ செட்கள், 2 ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஒரு ஸ்மார்ட் போனும் கைப்பற்றப்பட்டன.
மோதல் முடிவுக்கு வந்தபின் அங்கு உள்ளூர் மக்கள் திரண் டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களை தங்களிடம் ஒப்படைக்க கோரி அவர்கள் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வீச்சில் ஈடுபட்ட ஒரு கும்பலை கலைக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் முகம்மது யூசூப் பட் என்ற முதியவர் உயிரி ழந்தார்.
உயிரிழந்த ராணுவ வீரர்களில் கேப்டன் யாதவ், உ.பி. மாநிலம் கான்பூரை சேர்ந்தவர். 3 ஆண்டு களுக்கு முன் இவர் பணியில் சேர்ந்தார்.
நாயக் வெங்கடரமணா (38), ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். இவர் 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். சுபேதார் பூப் சிங் குஜ்ஜார் (46), 28 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.