இந்தியா

இந்திய-வங்கதேச எல்லையில் லேசர் சுவர்: எல்லைப் பாதுகாப்புப் படை முடிவு

செய்திப்பிரிவு

இந்திய-வங்கதேச எல்லையில் நுட்பமான தொலையுணர்வு கருவி கள் மற்றும் லேசர் சுவர்களை விரைவில் நிறுவ எல்லைப் பாது காப்புப் படை முடிவு செய்துள்ளது. இதன்மூலம், ஊடுருவல் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் குறை யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குவங்க மாநிலத்துக்கு உட்பட்ட இந்திய-வங்கதேச எல் லையில் ஊடுருவலுக்கு வாய்ப் புள்ள இடங்களில் பாதுகாப்பு குறைபாட்டை தடுக்க, விரைவில் லேசர் சுவர்களும், அதிநுட்பமான தொலையுணர்வு கருவிகளையும் நிறுவ எல்லைப் பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.

லேசர் கதிர்வீச்சு மற்றும் தொலையுணர்வுக் கருவிகள் பொருத்த வேண்டிய இடங்கள் ஏற்கெனவே அடையாளம் காணப் பட்டுவிட்ட நிலையில், அடுத்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் வகையில், விரைவில் இதற்கான திட்டப் பணிகள் தொடங்க உள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எல்லையில் பொருத்தப்படும் தொலையுணர்வுக் கருவிகள் செயற்கைகோள் தொழில்நுட்ப உதவியுடன் நிர்வகிக்கப்படும். வெளிச்சமில்லாத, இரவு நேரம், கடுமையான பனிப்பொழிவு போன்ற பல்வேறு கால நிலை களிலும் கண்காணிப்பை மேற் கொள்ள உதவும் வகையில் இந்த தொலையுணர்வு கருவிகள் வடிவமைக்கப்படும்.

இந்திய-பாகிஸ்தான் எல்லை யில் துணை ராணுவப் படையி னர் ஏற்கெனவே ஃபர்ஹீன் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி வருகின்றனர். எல்லைப் பாதுகாப்பில் லேசர் சுவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க பலன் களைத் தருவதை கருத்தில் கொண்டு, வங்கதேச எல்லை யிலும் இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப் பட்டது.

இதற்கான திட்டம் ஏற்கெனவே பரிசீலனையில் இருந்து வந்தது. அண்மையில் தாகா தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, தேச விரோத கும்பல் மற்றும் தீவிர வாதக் குழுக்களும் வங்கதேச எல்லையில் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, லேசர் சுவர் திட்டத்தை விரைந்து முடிக்க மத்திய உள்துறை அறிவுறுத்தியது.

மேலும் பதான்கோட் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் கே.கே.ஷர்மா மற்றும் உயர் அதிகாரிகள் இதற்காக அண்மையில் மேற்குவங்கம் முதல் திரிபுரா வரை எல்லைப் பகுதியை சுற்றிப் பார்வையிட்டனர்.

மொத்தம் 4,096 கிமீ நீளமுள்ள இந்திய-வங்கதேச எல்லையில் 2,216.7 கிமீ நீளம், மேற்குவங்க மாநிலத்தில் உள்ளது. இதில், முள்வேலி அமைக்க முடியாத பகுதிகளில் எல்லாம், லேசர் சுவர் மற்றும் தொலையுணர்வுக் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

இரவு நேரம், கடுமையான பனிப்பொழிவு போன்ற பல்வேறு கால நிலை களிலும் கண்காணிப்பை மேற்கொள்ள உதவும் வகையில் தொலையுணர்வு கருவிகள் வடிவமைக்கப்படும்.

SCROLL FOR NEXT