தற்போதுள்ள 16-வது மக்களவை யில் கடந்த 2 ஆண்டுகளாக பல விவாதங்கள் நடந்தபோதும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 16-வது மக்களவை பொறுப்பேற்றது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அதன்பின் கடந்த 2 ஆண்டுகளில் 8 முறை மக்களவை கூட்டத் தொடர் நடந்துள்ளது. அப்போது பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இதுவரை ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்று ‘இந்தியாஸ்பெண்ட்’ என்ற அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்தியாஸ் பெண்ட்’ ஆய்வில் கூறப்பட் டுள்ளதாவது.
பதினாறாவது மக்களவை கடந்த 2 ஆண்டுகளில் 8 முறை கூடியபோது பல விவாதங்கள் நடந்தன. அவற்றில் பலமுறை சோனியாவும், ராகுலும் பங் கேற்றனர். ஆனால் இருவரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. அதேசமயம், காங்கிரஸ் நாடாளு மன்ற கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 128 கேள்விகள் எழுப்பி உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலேதான் மக்களவையில் அதிகப்பட்ச கேள்விகளை கேட் டுள்ளார். அதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணியில் (என்டிஏ) உள்ள சிவசேனாவும் ஆச்சரியப் படும் வகையில் அதிகமான கேள்விகளை மக்களவையில் எழுப்பி உள்ளது. அதுமட்டுமல்ல மகாராஷ்டிராவை சேர்ந்த 10 எம்.பி.க்களில் 9 பேர் மக்களவை யில் அரசை கேள்வி கேட்டுள்ளனர்.
பாஜக.வில் எந்த பொறுப்பும் வழங்காமல் ஓரங்கட்டப்பட்ட மூத்த தலைவர் எல்.கே.அத்வானி யும் ஒரு கேள்வி கூட கேட்க வில்லை. பெரும்பாலான கேள்வி கள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் கேட்கப் பட்டுள்ளன. இவ்வாறு இந்தியாஸ் பெண்ட் அமைப்பு கூறியுள்ளது.