இந்தியா

வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி: தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு சம்மன்

பிடிஐ, ஏஎன்ஐ

பொது போக்குவரத்து வாகனங் களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தக் கோரி சுரக்்ஷா பவுன்டேஷன் என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்த வழக்கில் அனைத்து மாநிலங் களும் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தர விட்டிருந்தது.

ஆனால் தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, பிஹார், சிக்கிம், அசாம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் அளிக்கத் தவறிய மாநிலங் களுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

10 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் போக்கு வரத்துத் துறை செயலாளர்கள் வழக்கின் அடுத்து விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இவ்வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT