தேர்தல் தொடர்பாக இந்த முறை பல்வேறு புதிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு வாக் குச்சாவடியிலும் 4 போஸ்டர் கள் இடம்பெறும். அதில் வாக் காளர்கள் வாக்களிப்பதற்கான வாக்குச்சாவடி பற்றிய விவரம், என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பன போன்ற விவரம் இடம்பெற்றிருக்கும்.
மேலும் புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சீட்டுடன் வண்ண மயமான வாக்காளர் கையேடும் முதல்முறையாக வழங்கப்படும் என ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குச்சாவடிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.