இந்தியா

வங்கதேச பிரதமரை கொல்ல சதி: பெண் தீவிரவாதி கைது

ராய்ட்டர்ஸ்

வங்கதேச பிரதமரைக் கொல்வதற் காகத் திட்டமிட்டிருந்த தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை இந்திய காவல்துறை கைது செய்துள்ளது.

பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை அரசியல் ரீதியான பல்வேறு தாக்குதல்களை வங்கதேசம் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், ‘ஜமாத் உல் முஜாஹிதீன்' எனும் தீவிரவாத அமைப்பு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் கலேதா சியா ஆகியோரைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டி வந்தது. இவர்கள் இரு வரும் கடந்த 10 ஆண்டுகளுக் கும் மேலாக வங்கதேசத்தைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் 2 தீவிரவாதிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.‍

SCROLL FOR NEXT