மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இன்று (வியாழக்கிழமை) நாடு திரும்பினார்.
தனி விமானம் மூலம் இன்று காலை 7.15 மணிக்கு வந்திறங்கிய பிரதமர் மோடியை, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பிரதமர் மோடி மியான்மரில் நடைபெற்ற ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டிலும் ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி-20 நாடுகள் கூட்டமைப்பிலும் கலந்து கொண்டார்.