இந்தியா

இந்தியாவின் ‘கருந்துளை மனிதர் விஸ்வேஸ்வரா காலமானார்

செய்திப்பிரிவு

‘இந்தியாவின் கருந்துளை மனிதர்' என அழைக்கப்பட்ட விஞ்ஞானி சி.வி.விஸ்வேஸ்வரா (78) பெங்களூருவில் காலமானார்.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அணுத் துகள் இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற சி.வி.விஸ்வேஸ்வரா, மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் கருந்துளை கள் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.

கடந்த 1970-ம் ஆண்டு ‘கருந் துளை எப்படி இருக்கும்?, அதன் வடிவம் எவ்வாறு இருக்கும்?'என ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து 130 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ராட்சதக் கருந்துளைகள், ஒன்றை யொன்று சுற்றிக்கொண்டே மோதியபோது ஏற்பட்ட ஈர்ப்பலை களின் வடிவத்தை வரைந்தார்.

SCROLL FOR NEXT