இந்தியா

தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் 22-ல் தண்டனை அறிவிப்பு

ஐஏஎன்எஸ்

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்காவில் கடந்த 2007, அக்டோபர் 11-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப் பில் 3 பேர் இறந்தனர், 15 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் பாவேஷ் படேல், தேவேந்திர குப்தா, சுனில் ஜோஷி (தற்போது உயிருடன் இல்லை) ஆகியோர் குற்றவாளிகள் என ஜெய்ப்பூரில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் கடந்த 8-ம் தேதி அறிவித்தது. ஆர்எஸ்எஸ் பிரமுகர் சுவாமி அசீமானந்த் மற்றும் 6 பேரை விடுலை செய்தது.

குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்படும் தேதி இரண்டு முறை மாற்றப்பட்டது. இந்நிலையில் வரும் 22-ம் தேதி தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

SCROLL FOR NEXT