இந்தியா

பனிப்புயலில் சிக்கிய வேன் கவிழ்ந்து 5 பேர் பலி

பிடிஐ

காஷ்மீரில் பனிப்புயலில் சிக்கிய வேன் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் உள்ள பாதர்வாக் பஸ்கோலி நெடுஞ் சாலையில் நேற்று வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

பானியில் இருந்து பாதர்வாக் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த இந்த வேனில் 12 பேர் இருந்தனர். அப்போது, அங்கு வீசிய பனிப்புயலில் சிக்கிய வேன், 1,500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

வேன் தலை குப்புறக் கவிழ்ந்த தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந் தனர். மேலும், காயமடைந்த ஓட்டுநர் உட்பட 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

          
SCROLL FOR NEXT