இந்தியா

ஐஜத மாநில துணைத் தலைவர் பதவி பறிப்பு

பிடிஐ

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில துணைத் தலைவர் சதீஷ் குமார், அமைப்புச் செய லாளர் சஞ்சய் மண்டல் ஆகியோ ரின் பதவி நேற்று பறிக்கப்பட்டது.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் இவர்கள் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

நாலாந்தா தொகுதி முன்னாள் எம்எல்ஏவான சதீஷ்குமார், கட்சியின் தேசிய தலைவரும் மாநில முதல்வருமான நிதிஷ் குமாருக்கு எதிராக தொடர்ந்து கருத்துக் கூறி வந்தார். கடந்த 2-ம் தேதி அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “துதி பாடுவோரை மட்டுமே நிதிஷ்குமார் ஆலோ சகராக வைத்துக்கொள்கிறார்” என குற்றம் சாட்டினார்.

உ.பி. தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடாது என்று அறி வித்ததை தொடர்ந்து சதீஷ்குமார் இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT