ஹரியாணா, பஞ்சாப், டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஜாட் இன மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரியில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்து 30 பேர் பலியாகினர்.
இந்நிலையில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என்று அகில இந்திய ஜாட் ஆரக்சன் சமிதி அறிவித்துள்ளது.