இந்தியா

விளையாட்டு ஊழல் குறித்து விசாரிக்க தனிப் பிரிவு: சிபிஐ தகவல்

செய்திப்பிரிவு

விளையாட்டு ஊழல் குறித்து விசாரிக்க சிபிஐ தனிப் பிரிவை விரைவில் தொடங்க இருப்பதாக சிபிஐ இயக்குநர் ரஞ்ஜித் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரிவு சட்டவிரோத சூதாட்டம், மேட்ச் பிக்சிங் போன்ற விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஞ்ஜித் சின்ஹா தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில்: "விளையாட்டுத் துறையில், குறிப்பாக கால்பந்து போட்டிகளில் நடைபெற்று வரும் ஊழல்களை சிபிஐ அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விரைவில், விளையாட்டு ஊழல் குறித்து விசாரிக்க சிபிஐ தனிப் பிரிவை தொடங்கும்" என்றார்.

தனிப் பிரிவை உருவாக்குவதற்கான வரைவு மாதிரியை சிபிஐ விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT