அமர்நாத் யாத்திரை செல்ல விரும்பும் பக்தர் கள் தங்கள் உடல்நலம் குறித்த மருத்துவ சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 13 வயதுக்கு கீழ் உள்ளவர்களும், 75 வயதுக்கு மேற்பட்ட வர்களும் யாத்திரை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து 141 கி.மீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 12,756 அடி உயரத்தில் அமர்நாத் குகை அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு தோன் றும் பனி லிங்கத்தைத் தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக் கான அமர்நாத் யாத்திரை வரும் 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நடைபெற வுள்ளது. இந்நிலையில் அமர்நாத் கோயில் வாரியம் யாத்திரை மேற்கொள்ள விரும்பும் பக்தர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி யாத்திரைக்கான விண்ணப்பத்துடன் முழு உடல் ஆரோக்கியத்துக்கான மருத்துவ சான்றிதழையும் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விண்ணப்பங்கள், எந்த மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட விவரங்கள் >www.shriamarnathjishrine.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள் ளன. இதேபோல 13 வயதுக்கு கீழ் உள்ளவர் களும், 75 வயதுக்கு மேற்பட்டவர்களும் யாத்தி ரைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அமர்நாத் கோயில் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
எந்த நாளில் அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்க விரும்புகிறோம் என்ற தகவலையும் விண்ணப்பதில் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும். அந்த நாளில் மட்டுமே மலையடி வாரமான பல்தால் மற்றும் பாஹல்காமில் இருந்து மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.