இந்தியா

அதிக சேதத்தை ஏற்படுத்தும் பெல்லட் குண்டுகளுக்கு மாற்று: நிபுணர் குழு அறிக்கை

பிடிஐ

அதிக சேதத்தை ஏற்படுத்தும் பரல் (பெல்லட்) குண்டுகளுக்கு மாற்றாக மிளகாய் குண்டு மற்றும் ஸ்டன் லேக் குண்டுகளைப் பயன்படுத்தலாம் என நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடைபெற்றுவரும் கல்வீச்சு போராட்டங்களின் போது கலவரக் கும்பலைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினரால் பரல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இவை, கண்பார்வை இழப்பு உட்பட பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இதனால் பரல் குண்டுகளைப் பயன்படுத்த எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், பரல் குண்டுகளுக்கு மாற்று ஏற்பாடு தொடர்பாக மத்திய உள்துறை இணைச் செயலாளர் டிவிஎஸ்என் பிரசாத் தலைமையிலான 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு நேற்று தனது அறிக் கையை மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹரி ஷியிடம் சமர்ப்பித்தது. மிளகாயி லிருந்து எடுக்கப்படும் பெலார் கானிக் அமிலம் வானிலைல் அமைடு பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மிளகாய் குண்டுகள் மற்றும் ஸ்டன் லேக் குண்டுகளைப் பயன்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மிளகாய் குண்டுகள் தாங்க முடியாத எரிச்சலையும் தற்காலிக முடக்கத்தையும் ஏற்படுத்தும். தவிர, காதைச் செவிடாக்கும் அளவுக்கு பெருத்த ஒலியை உண்டாக்கும் ‘லார்டு’ (எல்ஏஆர்டி) உபகரணத்தைப் பயன்படுத்தலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பழைய கட்டிடங்களுக்கு ‘லார்டு’ அபாயகரமானது என்பதால் அவற்றை ஊரகப் பகுதியில் மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரலுக்கு தடையில்லை

அதேசமயம் பரல் குண்டுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. அரிதினும் அரிதான சந்தர்ப்பங்களில் கலவரத்தை கட்டுப்படுத்த பரல் குண்டுகளைப் பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக் கின்றன.

SCROLL FOR NEXT