இந்தியா

பாஜகவில் இணைகிறார் ரம்யா?

செய்திப்பிரிவு

தமிழ், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்யா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆதரவாளரான இவர், கடந்த‌ 2013-ம் ஆண்டு மண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பி ஆனார். கடந்த 2014-ல் அதே தொகுதியில் தோல்வி அடைந்த ரம்யா, கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

இந்நிலையில் ரம்யாவின் அரசி யல் குருவான எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணைய முடிவெடுத் துள்ளார். அவரைத் தொடர்ந்து ரம்யாவும் பாஜக‌வில் இணைய‌ உள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது. இந்தத் தகவலை கர்நாடக பாஜக தலைவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். எனினும் இதை ரம்யா உறுதி செய்யவில்லை.

SCROLL FOR NEXT