மத்திய நிதியமைச்சர் இன்று அளித்த பட்ஜெட் பற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
மத்திய பட்ஜெட் 2017 தவறான வழிநடத்தலுக்கு வித்திடுகிறது, என்ன சொல்கிறது என்பதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. முழுதும் எண் விளையாட்டுகளாகவும் வெற்று வார்த்தைகளாகவும் இந்த பட்ஜெட் நிரம்பியுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த பட்ஜெட், பயனற்றது, அடிப்படையற்றது, நோக்கமற்றது, செயல்திட்டங்களற்றது, இதயமற்றது. நம்பகத்தன்மையை இழந்த ஒரு அரசிடமிருந்து நாட்டின் எதிர்காலத்திற்கான எந்த ஒரு திட்டமுமில்லாத வெற்று பட்ஜெட்.
வரிசெலுத்துவோர் இன்னமும் வங்கிகளிலிருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக அகற்றுக. பணமதிப்பு நீக்க விளைவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் எங்கே? இதனால்தான் இது தவறாக வழிநடத்தும் பட்ஜெட் ஆகும்.
முழுதும் எண் விளையாட்டுகளும், வெற்று வார்த்தைகளுமே நிரம்பியிருந்தது, ஒன்றுமேயில்லாத பட்ஜெட்.
இவ்வாறு கூறியுள்ளார் மம்தா.