ஆந்திரா - ஒடிசா மாநில எல் லையில் 6 அரசு ஊழியர்களை மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒடிசாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஆந்திரா-ஒடிசா எல்லையில் இருக்கும் போடங்கா பகுதிக்கு வருவாய் துறை அதிகாரிகள் 6 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை நேற்று காலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திடீரென கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மாவோயிஸ்ட் களிடம் இருந்து அரசு அதி காரிகளைப் பத்திரமாக மீட்பதற் கான நடவடிக்கைகளில் போலீ ஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரா - ஒடிசா எல்லையில் உள்ள வனப்பகுதியில் கடந்த ஆண்டு 31 மாவோயிஸ்ட்களை போலீஸார் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். அதற்கு பழிதீர்க்கும் வகையில் அரசு அதிகாரிகளை மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை அடுத்து ஆந்திராவின் விசாகப் பட்டினம், காகுளம், விஜய நகரம் உள்ளிட்ட மாவோ யிஸ்ட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.