சவுதி அரேபியாவில் வேலையின்றி பரிதவிக்கும் இந்திய தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:
சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டின் கட்டுமான நிற வனங்கள் பின்னடைவைச் சந்தித் துள்ளன. அத்தகைய நிறுவனங்க ளில் பணியாற்றிய இந்திய தொழி லாளர்களுக்கு கடந்த 7 மாதங்க ளாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. சில வாரங்களாக போதிய உணவின்றி பசியில் வாடிய அவர்களுக்கு ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் அடைக்கலம் அளித்துள்ளது.
சவுதியின் 4 நிறுவனங்களைச் சேர்ந்த 7700 இந்திய தொழிலா ளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களில் 4072 பேர் சவுதி ஒகர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ரியாத், டம்மாமில் உள்ள 10 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல எஸ்ஏஏடி குரூப் நிறுவனத்தைச் சேர்ந்த 1457 பேர் டம்மாமில் உள்ள 2 முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக சவுதி முழுவதும் 20 நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டு, 7700 இந்திய தொழிலா ளர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த முகாம்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்ற னர். அங்கு தங்கியுள்ள தொழிலா ளர்களின் விவரங்கள் சேகரிக்கப் பட்டு வருகின்றன.
அவர்கள் எத்தனை ஆண்டு களாக சவுதியில் பணியாற்றி வரு கின்றனர், ஊதிய நிலுவைத் தொகை எவ்வளவு? தொடர்ந்து சவுதியில் பணியாற்ற விருப்பமா என்பது குறித்த விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சவுதியில் வி.கே.சிங்
இதனிடையே சவுதியில் தவிக் கும் தொழிலாளர்களைப் பத்திர மாக இந்தியா அழைத்துவர மத்திய வெளியுறவுத் துறை இணை யமைச்சர் வி.கே. சிங் நேற்றிரவு ஜெட்டா சென்றார். இன்று அவர் இந்திய தூதரக அதிகாரிகள், சவுதி அரசு அதிகாரிகளை சந்தித் துப் பேசுகிறார். அவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.