இந்தியா

அமெரிக்காவில் இந்தியர் படுகொலை விவகாரத்தில் மோடி அமைதி காப்பது ஏன்?- கார்கே கேள்வி

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் இந்தியப் பொறியாளர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பியும் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) கூடியது. முதல் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை நடந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இந்தியர்கள் கொல்லப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கேள்வி நேரம் முடிந்த சிறிது நேரத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜூன கார்கே, ''அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு, இந்தியப் பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா உள்ளிட்டவர்களின் மரணங்கள் நிகழ்கின்றன.

இத்தகைய சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மோடி அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஏன் மோடி அமைதியாக இருக்கிறார்?'' என்றார்.

திரிணமூல் எம்.பி. சவுகதா ராய், அமெரிக்காவில் இந்தியர்கள் இழிவுபடுத்தப்படுவது குறித்தும், ஹெச்1பி விசா பிரச்சனை குறித்தும் கவலை எழுப்பினார்.

ஒடிசா மாநில பிஜு ஜனதா தள எம்.பி., ''அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு, இந்திய அரசு என்ன ஆலோசனைகளை வழங்கவுள்ளது?'' என்று கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT