தெலங்கானா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மாநிலத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஈடெல ராஜேந்தர் தாக்கல் செய்ய உள்ளார்.
நாட்டின் 29-வது மாநிலமாக உதயமான தெலங்கானாவில் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) ஆட்சியில் உள்ளது. இந்த அரசு மாநிலத்தின் முதல் பட்ஜெட்டை இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் ஈடெல ராஜேந்தர் 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதனை மாநில துணை முதல்வர் ராஜய்யா முன்மொழிய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸை எதிர்கொள்ளும் வியூகத்தையும் டி.ஆர். எஸ். வகுத்துள்ளதாக முதல்வர் சந்திரசேகர ராவ் கூறினார்.