இந்தியா

குறுகிய கொள்கைகளை திணித்து சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்துகிறது பாஜக அரசு: சோனியா காந்தி குற்றச்சாட்டு

பிடிஐ

‘‘தங்களுடைய குறுகிய கொள்கை களை மக்களிடம் திணித்து, சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்துகிறது பாஜக அரசு’’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதை முன்னிட்டு நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கட்சி எம்.பி.க்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

நாட்டில் உள்ள அமைப்புகளில் தலையிட்டு மத்திய அரசு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் குறுகிய மனப்பான்மையுடன் உள்ள கொள்கைகளை மக்கள் மனதில் திணிக்க பாஜக அரசு தீவிரமாக உள்ளது. பாஜக அரசுக்கு மக்கள் அளித்துள்ள பெரும்பான்மை பலத்தை பாஜக தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தங்கள் கொள்கைகளை திணிக்க மக்கள் அனுமதி வழங்கிவிட்டதாக அது நினைக்கிறது. இதன்மூலம் சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றி வருகிறது. அத்துடன் தலித்துகள், ஆதிவாசிகளின் உரிமைகளை மத்திய அரசு பறிக் கிறது. குஜராத்தில் 4 தலித்துகளை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து அவமானப்படுத்தி இருக் கின்றனர். இந்த சமுதாயத்தின் மீது அரசு தொடுத்து வரும் தாக்குதல்களுக்கு இந்த ஒரு சம்பவம் உதாரணம்.

அரசியல் சட்ட திட்டங்கள், நடைமுறைகளை மக்கள் அளித்த பெரும்பான்மையால் மறந்துவிடக் கூடாது. காஷ்மீரில் தற்போதுள்ள நிலைமை நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தேச பாதுகாப்பை எந்தக் காரணத்தை முன்னிட்டும் விட்டு கொடுக்க கூடாது. தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

SCROLL FOR NEXT