“கோஷ்டி அரசியலில் ஈடுபடுவோர் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற முடியும்” என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
உ.பி.யின் அமேதி தொகுதியில் இருந்து மக்களவைக்கு ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது தொகுதியில் 3 நாள் பயணமாக கடந்த புதன்கிழமை இங்கு வந்தார். நேற்று முன்தினம் அவர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், “கோஷ்டி அரசியலில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபடுவோர் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட்டு, உ.பி.யில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும். பிற கட்சிகளை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்” என்றார்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் திட் டங்களை மக்களிடம் விளக்குமாறு ராகுல் கேட்டுக்கொண்டார். எதிர்க் கட்சியினரின் பிரச்சாரங்களை எதிர்கொள்வது குறித்தும் அவர் விவாதித்தார்.
ராகுல் காந்தி நேற்று அமேதியில் இருந்து செல்லும்போது, அங்கன் வாடி ஊழியர்கள் அவரது வாகனத்தை நிறுத்தி, தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க முயன்றனர். இவர்களை போலீஸார் அனுமதிக்க மறுத்தனர். இதைக்கண்ட ராகுல், காரில் இருந்து இறங்கி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கிழக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் தியோரியா நகரில் இருந்து டெல்லிக்கு மகாயாத் திரை செல்ல ராகுல் திட்டமிட் டுள்ளார். விவசாயிகளின் பிரச்சி களை முன்வைத்து நடைபெறும் இந்த யாத்திரை வரும் 6-ம் தேதி தொடங்கி, 1 மாத காலத்துக்குப் பின் முடிகிறது.
அமேதியில் அங்கன்வாடி ஊழியர்களிடம் நேற்று குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி.| படம்: பிடிஐ