டெல்லியில் வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
நீல்சன் மற்றும் தனியார் இந்தி செய்தி தொலைக்காட்சி நிறுவனங் கள் இணைந்து டெல்லியில் கருத்துக் கணிப்பு நடத்தின. அதில், மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் பாஜக 48 இடங்களுடன் தனிப்பெரும் பான்மை பெற்று ஆட்சி அமைக் கும் எனத் தெரியவந்துள்ளது.
மோடி அலை காரணமாக பாஜக வுக்கு 38 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் கருத்துக் கணிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2-வது இடத்தில் ஆம் ஆத்மி
கடந்த முறை 28 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி இம்முறை 18 தொகுதிகளுடன் இரண்டாம் இடம் பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் கூறப் பட்டுள்ளது. அதேசமயம் 2013 தேர்தலில் 27 சதவீத வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி இம்முறை 26 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது.
காங்கிரஸுக்கு பின்னடைவு
காங்கிரஸ், 3-வது இடத்தை பெற்றாலும் அது 8 தொகுதி களை மட்டுமே கைப்பற்றும் என கருத்துக் கணிப்பில் கூறப் பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒரு தொகுதி மட்டும் கிடைக் கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் பிரபலமானவர்
டெல்லியில் பிரபலமானவர் என எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 63 சதவீதம் பேர் ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடம் பிடித்துள்ளார்.
25 சதவீதம் பேர் ஆதரவுடன் கேஜ்ரிவால் 2-வது இடம் பிடித்துள் ளார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு 12 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 5 முதல் 7- ம் தேதி வரையிலான நாட்களில் டெல்லியின் 35 தொகுதிகளில் 6,528 பேர்களிடம் இக்கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஹர்ஷவர்தன்
முதல்வர் பதவிக்கு பொருத்தமா னவர் யார் என்ற கேள்விக்கு, கேஜ்ரி வால் முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தில் மத்திய அமைச் சர் ஹர்ஷவர்தன் உள்ளார்.
இதில் இருவருக்கும் ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே வித்தியாசம். இதனால், டெல்லி முதல் அமைச்சர் வேட் பாளராக ஹர்ஷவர்தன் பெயரை பாஜக முன்னிறுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.