உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிரியங்கா களமிறக்கப் படுவது ராகுலின் தோல்வியை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது என்று பாஜக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா நேற்று கூறியதாவது:
உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா களமிறக்கப்படுவது காங்கிரஸின் வாரிசு அரசியலை தோலுரித்து காட்டுகிறது. மேலும் அரசியலில் ராகுல் காந்தி தோல்வியடைந்துவிட்டார் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு குடும்ப கட்சி என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என்று கூறிவரும் நிலையில் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டுவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.