இந்தியா

தீவிரவாததிற்கு எதிராக ஆந்திர மாணவர்களின் கலாபூர்வ பிரச்சார உத்தி

செய்திப்பிரிவு

ஆந்திர அரசின் சமூக நலத்துறை கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தீவிரவாததிற்கு எதிராக நூதன பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ள குருகுல பாடசாலை கல்வி நிறுவனத்தை சார்ந்த மாணவர்கள், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்க்கும் நோக்கில் புதுமையான முயற்சியில் ஈடுப்பட்டனர்.

அண்மையில் பிரான்ஸில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 81 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்று கிழமை ஆந்திராவின் பகலா கடற்கரையில் மணற் சிற்ப வடிவமைப்பாளர் சனத்குமாரின் வழிகாட்டுதலின் படி மணற் சிற்பத்தை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர் குருகுல பாடசாலை மாணவர்கள்

.இது குறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயா கூறும்போது, “உலகம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல் மூலம் அப்பாவி மக்களை கொல்லுகின்றனர். தீவிரவாத அச்சுறுத்தலையே மணல் சிற்பம் வாயிலாக எங்கள் மாணவர்கள் விளக்கியுள்ளனர்” என்றார்.

21 மாணவர்கள் 5 மணி நேரம் செலவிட்டு ஈபிள் டவர் மணற் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர். கடுமையான முயற்சியில் இம்மணற் சிற்பத்தை வடிவமைத்தாக மாணவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT