இந்தியா

மாவோயிஸ்ட் கமாண்டர் சிக்கினார்

பிடிஐ

சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பார்சேலி மற்றும் சிக்பால் வன கிராமங் களுக்கு இடையே, நக்சல் நடமாட்டம் இருப்பதாக மத்திய ரிசர்வ் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தபோது, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த மாவோயிஸ்ட் கமாண்டர் கட்மா மாத்கம் (30) என்பவர் சிக்கினார்.

கட்மா பற்றி தகவல் அளிப்பவர் களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என, போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பிடிபட்டுள்ள மாவோயிஸ்ட் கமாண்டருக்கு பல்வேறு நாச வேலைகளில் தொடர்பு உள்ளது.

இவரது தலைமையிலான மாவோயிஸ்ட்கள், கடந்த 17-ம் தேதி குட்சே கிராமத்தின் அருகே நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 2 வீர்ர்கள் காயமடைந்தனர்.

SCROLL FOR NEXT