இந்தியா

ஸ்ரீஹரிகோட்டாவில் அமெரிக்க தூதர் நான்சி போவெல்: மங்கள்யான் நிகழ்வைக் காண வருகை

செய்திப்பிரிவு

செவ்வாய் கிரகத்துக்கு 'மங்கள்யான்' விண்கலம் அனுப்பப்படும் நிகழ்வைக் நேரில் காண்பதற்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி போவெல் ஸ்ரீஹரிகோட்டா வந்தடைந்தார். சென்னைக்கு விமானம் மூலம் வந்த அவர் அங்கிருந்து உடனடியாக ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டுச் சென்றார்.

இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

SCROLL FOR NEXT