ஆங்கில புத்தகத்தின் அட்டைப் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, விஷ்ணுவை போல் சித்தரிக்கப்பட்டிருந்தார். இதில், தோனியின் கையில் செருப்பு இருந்தது. இதுதொடர்பாக ஆந்திர மாநிலம் அனந்தபூர் நீதிமன்றத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி ஒருவர் பொது நலன் வழக்கு பதிவு செய்தார். தோனி இவ்வழக்கில் தொடர்ந்து ஆஜர் ஆகாததால் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இவ்வழக்கில் நேற்று தோனி கட்டாயமாக ஆஜர் ஆகவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று தோனி தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, தோனி மீதான வாரண்ட்டை ரத்து செய்யும்படி மனு மூலம் கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் பிடிவாரண்ட்டை ரத்து செய்தது.