ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில் விஜ், ஒரு இந்து பயங்கரவாதியாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் மீது அவர் விமர்சனம் தொடுத்த போது, “பாகிஸ்தான் பயங்கரவாதிகளை” விட்டு விட்டு, இந்தியக் குடிமகன்களைப் பிடித்து அவர்களை ‘இந்து பயங்கரவாதிகள்’ என்று முத்திரைக் குத்துகின்றனர் என்று சாடினார்.
இந்து தீவிரவாதம் என்ற ஒன்று கிடையவே கிடையாது, “ஒரு இந்து பயங்கரவாதியாக இருக்கவே முடியாது. இந்து பயங்கரவாதம் என்ற சொற்றொடரே அர்த்தமற்றது. காங்கிரஸ்தான் இந்த விளையாட்டை ஆரம்பித்து வைத்தது” என்றார்.
இவருக்கு பதில் அளித்த காங்கிரஸின் திக்விஜய் சிங், விஜ் கூறுவது சரியே. ஏனெனில் அது சங்கப்பரிவார பயங்கரவாதம் இந்து பயங்கரவாதம் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.