இந்தியா

சமாஜ்வாதியில் இணைந்தார் தோனியின் அண்ணன்

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனியின் அண்ணன் நரேந்திர சிங் தோனி சமாஜ்வாதி கட்சியில் முலாயம் சிங் யாதவ் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.

'முலாயம் சிங் யாதவைச் சந்தித்த நரேந்திர சிங் தோனி, கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்தார். அதற்கு முலாயம் சம்மதம் தெரிவித்தார். சமாஜ்வாதிக் கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் நம்பிக்கை இருப்பதாகவும், சமாஜ்வாதி கட்சியை ஜார்க்கண்டில் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபடப்போவதாகவும் நரேந்திர சிங் தோனி தெரிவித்தார்’ என, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT