இந்தியா

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் வன்முறை மீண்டும் தலைதூக்கும்: மாநில காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

பிடிஐ

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் வன்முறை மீண்டும் தலைதூக்கும் என்று மாநில காங்கிரஸ் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான அமரிந்தர் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிந்தது. கொட்கபுரா நகரில் உள்ள புரானி தனா மண்டி பகுதியில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் அமரிந்தர் சிங் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சீக்கிய இளைஞர்கள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்யவும் அவர்களை மீட்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மிகக் கடுமையான முயற்சிக்குப் பிறகு பஞ்சாப் மாநிலம் தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந் தால், வன்முறைச் சம்பவங்களும் தீவிரவாத செயல்களும் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கீழ்த்தரமான அரசியல் மற்றும் வலது, இடதுசாரி சித்தாந்தங்களை உள்ளடக்கிய அணுகுமுறை காரணமாக காலிஸ்தான் அமைப்புகள் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT