லஷ்கர் இ தொய்பா தீவிரவாத தலைவர் ஹபீஸ் சையது ஆதர வுடன் டெல்லி ஜேஎன்யூ பல் கலைக்கழகத்தில் தீவிரவாதி அப்சல் குருவின் அஞ்சலி நிகழ்ச்சியும் ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கு உரிய ஆதாரங்களை வெளியடுமாறு எதிர்க்கட்சிகள் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளன..
டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) வளாகத்தில் தீவிரவாதி அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்திய மாணவர் தலைவர் கண்ணய்யா குமாரை போலீஸார் கைது செய்து தேச துரோக வழக்கை பதிவு செய்தனர். இதற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மாணவர்களின் குரல்வளையை நசுக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தன.
இந்நிலையில் தேச விரோத முழக்கங்களுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நேற்று அவர் கூறும்போது, ‘‘எப் பொழுதெல்லாம் தேசத்துக்கு விரோதமாக முழக்கங்கள் எழுகிறதோ, அப்போதெல்லாம் அதை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் முன் வரவேண்டும். ஒன்றாக இணைந்து ஒருமித்த குரலில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இதில் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது.
ஜேஎன்யூவில் நடந்த சம்பவத்துக்கு தற்போது லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையத் ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே நாடும், நாட்டு மக்களும் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தேச விரோத நடவடிக்கை களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. அதே சமயம் நிரபராதிகள் நிச்சயம் தண்டிக்கப்பட மாட்டார் கள்’’ என்றார்.