பொற்கோயிலுக்குள் ராணுவம் ‘புளூ ஸ்டார் ஆபரேஷன்’ நடத்திய 32-வது ஆண்டு தினம் நேற்று (திங்கள் கிழமை) அனுசரிக்கப்பட்டது.
இதையடுத்து அமிர்தசரஸ் நகர் முழுவதும் போலீஸாரும் துணை ராணுவத்தினரும் குவிக் கப்பட்டனர். மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று முதல் வர் பிரகாஷ் சிங் பாதல், ஷிரோன் மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி தலைவர் அவ்தார் சிங் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு பொற்கோயிலுக்குள் அமைதியான முறையில் பிரார்த் தனைகள் நேற்று நடைபெற்றன.
பொற்கோயிலுக்குள் நினைவு தின நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சீக்கியர்களில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிகழ்ச்சி களை நடத்த விடமாட்டோம் என் றும், முழு அடைப்புக்கும் ‘தல் கல்சா’ உட்பட சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து பொற்கோயி லுக்கு வெளியில் துணை ராணுவத்தினர் ஏராளமானோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸ் ஆணை யர் ஏ.எஸ்.சஹால் கூறும்போது, ‘‘கடைகளை மூடுவதற்கு யாரும் நிர்பந்திக்க முடியாது’’ என்றார்.